Categories
உலக செய்திகள் சற்றுமுன்

இப்போ வேண்டாம்….. ஒரு வருஷம் ஆகட்டும்….. அப்பறம் பாத்துக்கலாம்… அதிபர் ட்ரம்ப்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடங்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பை கட்டுபடுத்த உலக சுகாதார நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒலிம்பிக் போட்டியை ஓராண்டு ஒத்தி வைக்கலாம் என்று அமெரிக் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜப்பானில் டோக்கியோவில் ஜூலை 24ல் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியை ஓர் ஆண்டுக்கு ஒத்தி வைக்கலாம். ஒலிம்பிக் நடத்தப்பட்டால் மேலும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. ரசிகர்கள் இன்றி ஒலிம்பிக் நடந்தால் யாரும் மைதானத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |