Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் மீது நடவடிக்கை…. கோர்ட்க்கு போன திமுக…. பின் வாங்கியது ? பரபரப்பு தகவல் …!!

தமிழக முதல்வர், அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.12ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக கிராமங்களில் இணையதள வசதிக்கு 2019ஆம் ஆண்டு டெண்டர் பணிகள் தொடங்கப்பட்டது. ஆயிரத்து 950 கோடி மதிப்பிலான இந்த டெண்டரில் முறைகேடு நடந்ததாகவும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் மே மதமே புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே அது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முதல்வர் மற்றும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உதவிட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 16ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது இ-டெண்டர் நடைமுறைகள் இன்னும் முடியவில்லை. டெண்டர் இன்னும் நடைமுறையில் தான் இருக்கிறது. இதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் ? ஆர் எஸ் பாரதி கொடுத்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை,  அரசியல் நோக்கம் தொடர்பு இருப்பதாகவும் தெரிகிறது என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

மேலும் இது தொடர்பாக ஆர்.எஸ் பாரதி வழக்கை வாபஸ் பெற்றால் சிறப்பாக என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளார். இதற்கு ஆர்எஸ். பாரதி தரப்பில் இன்றைய தின விசாரணையில் முதலவர் , அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Categories

Tech |