சசிகலா விடுதலை ஆகும் நாளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கர்நாடக உளவுத்துறை அளித்துள்ள அறிக்கை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
வரும், 27ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என தெரிகிறது. அன்றைய தினம் ஏராளமான தொண்டர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் கூடுவார்கள் என்பதால், அவர்களை சிறை எல்லையிலேயே தடுத்து நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
வழக்கமான கைதிகளுடன் விடுதலை செய்யாமல், பாதுகாப்பு கருதி தாமதமாக விடுதலை செய்ய உள்ளனர். பிற கைதிகளை, இரவு 7.30 மணிக்கும், சசிகலாவை, இரவு 9.30 மணிக்கும் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளனர்.
கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை, சசிகலாவை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று கர்நாடக காவல் துறையினர் விடுவர். ஆனால். அதற்குள் அவர் உடல் நலம் முழுவதுமாக குணமாகவில்லை என்றால், சிகிச்சையை விரும்பும் மருத்துவமனையில் தொடர வழி வகை செய்யப்படும்.