Categories
உலக செய்திகள்

சுடுநீரில் போடப்பட்ட குழந்தை…. தந்தையின் கொடூர செயல்…. உயிரிழந்த சோகம்….!!

லிபியாவில் தந்தை வெந்நீரில் போட்டு குழந்தையை கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லிபியாவில் Cyrenaica Ajdabiya பகுதியில் வாழ்ந்து வரும் Rabiha Khaled Abdel Hamid என்ற சிறுமியின் தந்தை சிறுமிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு தொடர்ந்து அழுததால் சுடுதண்ணி நிரப்பப்பட்ட தொட்டிக்குள் வைத்துள்ளார். இதனிடையே வீட்டிற்கு வந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்த தகவல=றிந்த காவல்துறையினர் விரைந்து வந்து சிறுமியின் பெற்றோரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்த விசாரணையில் சிறுமிக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் குளிக்க வைக்க அவரது தந்தை சென்றுள்ளார் என்றும் ஆனால் சிறுமி குளிக்க மறுத்ததால் குளியல் தொட்டிக்குள் போடப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் பெற்றோர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் சிறுமியின் தந்தை மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தாயும் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டாரா  என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |