லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரியான மும்மர் கடாபி என்பவரது மகன் அல்-சாதி கடாபி திரிபோலியில் இருக்கும் சிறையிலிருந்து 7 வருடங்கள் கழித்து விடுதலையாகியுள்ளார்.
முன்னாள் லிபிய சர்வாதிகாரியான மும்மர் கடாபி என்பவரின் ஒரு மகனை ஏழு வருடங்கள் கழித்து சிறையிலிருந்து விடுதலை செய்ததாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளார்கள். அதாவது கடாபியின், மகனான அல்-சாதி கடாபியை நைஜரிலிருந்து நாடுகடத்தினர். அதனைத்தொடர்ந்து, திரிபோலியில் இருக்கும் அல்-ஹதாபா என்ற சிறையில் அடைத்தனர்.
கடந்த 2011-ஆம் வருடத்தில், நடந்த லிபியாவின் கலகத்திற்கு, முன் செய்த குற்றங்களுக்காக அவருக்கு 7 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது, முன்னாள் சர்வாதிகாரியான கடாபிக்கு 8 பிள்ளைகள். அதில், ஒரு மகனை, கடாபி கொலை செய்யப்பட்ட சமயத்தில் கொலை செய்தனர்.
மேலும், இரு மகன்கள், லிபிய கலகம் நடந்த போது கொலை செய்யப்பட்டார்கள். மேலும் ஒருவர் கடந்த 2017 -ஆம் வருடத்தில் சிறையிலிருந்து விடுதலையாகி, லிபியாவில் வாழ்ந்து வருகிறார். மற்றொருவர் லெபனான் சிறையில் உள்ளார். மீதமுள்ள மகன்கள் அல்ஜீரியாவிற்கு தப்பித்து விட்டனர். மேலும், கடந்த 2012-ஆம் வருடத்தில், கடாபியின் மனைவி மற்றும் இரு மகன்களுக்கும் ஒரு மகளுக்கும் ஓமன் தஞ்சம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.