கடுமையான உழைப்பாலும் அதிகபடியான முயற்சியாளும் வெற்றி பெறக்கூடிய துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு திருப்திகரமாக இருக்கும். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். சுப செய்தி ஒன்று சுற்றத்தார் மூலம் வந்து சேரும். பயணம் பலன் தரக்கூடியதாக இருக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இன்று வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். திடீர் செலவு கொஞ்சம் ஏற்படும். அடுத்தவர்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகும். பொருள் வரவு அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் இருக்கும். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும். இன்று நீங்கள் மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தாருடன் கலகலப்பாக காணப்படுவீர்கள்.
இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பை கொடுப்பதாக இருக்கும். அதுபோலவே நீங்கள் மிக முக்கியமாக காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து விதத்திலும் வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள். எப்படி இருப்பீர்கள் என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் சிவப்பு நிறம்