Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “கண்களின் பாதுகாப்பில் கவனம்”… மன தைரியம் கூடும்..!!

எதிரிகளை கண்டு அஞ்சாமல் எதிர்த்து போராடக்கூடிய துலாம்ராசி அன்பர்களே..!! இன்று வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கு நல்ல முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறையில் நிதானப் போக்கை பின்பற்றுவது நல்லது. சுமாரான அளவில் தான் இன்று பண வரவு இருக்கும். ஆனால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய கண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் இருக்கட்டும். உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். இன்று ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். மன தைரியம் கூடும். புத்தி தெளிவு ஏற்படும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக இருக்கும். முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பண உதவி உங்களுக்கு கிடைக்கும்.

சந்தோஷமான மனநிலை இருக்கும். மேலிடத்தில் இருந்து நல்ல தகவல்கள் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். நீங்கள் நண்பர்கள் மூலம் செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கலகலப்பான சூழலும் நிலவும். எது எப்படியாக இருந்தாலும் இன்று தீப ஒளி  திருநாள் என்பதால் உங்களுடைய மனதை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். எந்த பிரச்சினையாக இருக்கட்டும் அதை தூக்கி தூர போட்டுவிட்டு இந்த தீபாவளியை மனம் மகிழும்படி கொண்டாடுங்கள். அது போதும். அது போலவே நீங்கள் இன்று மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |