Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்”… குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்..!!

சிந்தனையின் சொற்பமாக திகழும் துலாம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாளாக இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வழக்குகள் அனைத்தும் சாதகமாகும். இன்று நீங்கள் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்து செல்வது மட்டும் நல்லது. பணிகள் நிறைவடைய அலைய வேண்டியிருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்க கூடும். புதிய நட்பு கிடைப்பதுடன் அவரது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது மட்டும் நல்லது. பெண்களுக்கு வீண் பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை கொடுக்கும்.

அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். இன்று மாணவர்கள் ஓரளவு சிறப்பை பெறமுடியும். கல்வியில் ஓரளவு ஆர்வம் கம்மியாகத்தான் இருக்கும். விளையாட்டில் ஆர்வம் செல்லும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |