துலாம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். முக்கிய செலவுக்கு பணம் கடன் பெறுவீர்கள். பெண்கள் இன்று நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இன்று சக ஊழியர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளைத் திறமையாகவும் செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசனை செய்வார்கள்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும். இன்று எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். மனமும் மகிழ்வாக காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து விஷயங்களும் நல்லபடியாகவே நடக்கும். அது போலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுங்கள். செல்வ யோகம் பெறக் கூடிய சூழல் இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்