துலாம் ராசி அன்பர்களே..!! இன்று கடமை தவறாது வேலைகளை சிறப்பாகச் செய்தாலும் நல்ல பெயர் இருக்காது. உங்களை மற்றவர்கள் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் காரியத்தை மட்டும் மேற் கொள்ளுங்கள் அது போதும். குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணி காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய கருத்துக்கு சிலர் மாற்றுக் கருத்து தெரிவிக்கக் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்த்துப் பேசாமல் அமைதியாக இருப்பதுதான் எப்பொழுதுமே புத்திசாலித்தனம். மாணவக் கண்மணிகள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை கொடுக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். அப்போதுதான் நினைவில் வைத்துக் கொள்ள உதவும். வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் ஏற்படும். மிகவும் கவனமாகப் பேசுவது மட்டும் நன்மையை கொடுக்கும். பணம் வரும் வாய்ப்பு இருக்கும்.
எதிர்த்து செயல்படவர்கள் ஓரளவு ஒதுங்கி செல்வார்கள். இன்று கொடுக்கல் வாங்கல்கள் ஓரளவு நிம்மதியை கொடுக்கும். பழைய கடன்கள் அடைபடும் நாளாகவும் இருக்கும். கடன்கள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போதோ அல்லது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள் அது போதும். நல்ல வெற்றி வாய்ப்புக்கள் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாடு உங்களுக்கு சிறப்பான வழிபாடாக அது மாற்றி அமைத்துக் கொடுக்கும். உங்களுடைய செல்வ நிலையும் உயர்த்தி கொடுக்கும். கர்ம தோஷங்களில் இருந்தும் அது உங்களை காக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்