துலாம் ராசி அன்பர்களே..!! இன்று நல்ல மனிதர்களின் சந்திப்பு கிட்டும் நாளாக இருக்கும். உத்தியோக மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். உறவினர் பகை மாற புதிய யுக்திகளை கையாளுவீர்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இன்று குடும்ப கஷ்டங்கள் நீங்கும்.தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாகவே செயலாற்றுவீர்கள். தடைபட்ட காரியத்தில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள்.
நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்காதவர் என்பதால் உதவி செய்யும் பொழுது கண்ணும் கருத்துமாக செய்யுங்கள். மனதில் இருந்த கவலை நீங்கி இன்றைக்கு நிம்மதியும் உண்டாகும்.இன்று குடும்பத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும் . அதுமட்டுமில்லாமல் குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுதை கழிப்பதற்கான சூழல் இருக்கும். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
அதே போல வெளிவட்டார பழக்க வழக்கங்கள் இன்று விரிவடையும். வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். இன்றைய நாள் நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும் நாளாக இருக்கும். இருந்தாலும் வெளியில் செல்லும்பொழுது நீங்கள் வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வழங்குங்கள். உங்களுக்கு கர்ம தோஷங்கள் நீங்கி செல்வ பாக்கியத்தை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்