துலாம் ராசி அன்பர்களே..!! இன்று ஆரோக்கியம் சீராகி ஆனந்தத்தை கொடுக்கும். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். மறதியால் விட்டுப்போன காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். இன்று அடுத்தவரை மட்டும் நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். அப்படி இறங்கினால் கவனமாக செயல்படுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக இன்று அலைய வேண்டியிருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருந்து கொள்ளுங்கள். தடைகளை தாண்டித்தான் இன்று நீங்கள் முன்னேறிச் செல்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்துமே நிறைவேறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். இன்றைய நாள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். இன்று நீங்கள் எந்த காரணத்தையும் கொண்டு கடன்களை மட்டும் வாங்காதீர்கள் அது போதும். மாணவச் செல்வங்கள் இன்று கடினமாக உழைத்துத்தான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.
பாடங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதுமட்டுமில்லாமல் இன்று நீங்கள் வெளியே செல்லும் போது மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஸ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று மகா அன்னாபிஷேகத்தை கண்டுகளியுங்கள். மகா அன்னாபிஷேகத்தை நீங்கள் பார்த்து விட்டால் உங்கள் வாழ்க்கையில் வற்றாத செல்வம் ஏற்படும். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்