Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “குடும்ப கஷ்டங்கள் நீங்கும்”… யாருக்கும் அஞ்சமாட்டீர்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! நினைத்த காரியம் நிறைவேறும் நாளாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செலவுகளை சந்திக்க நேரிடும். தொழிலில் இருந்த மறைமுக போட்டிகள் விலகிச்செல்லும். எதிர்பாராத தொகை கைக்கு வந்து சேரும். இன்று குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக காரியங்களை செய்வீர்கள். தடைபட்ட காரியங்கள் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும்.

முட்டுக்கட்டைகள் விலகிச் செல்லும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்காதவர் என்பதால் உதவிகளை செய்யும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி உற்சாகமாகவே இன்று காணப்படுவீர்கள். நிம்மதி உண்டாகும். அனைத்து காரியங்களும் உங்களுக்கு சிறப்பை கொடுக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணிக்காக வெளியில் செல்லும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு அன்னமிட்டு சிவ பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய காரியங்களைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  5 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |