Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும்”… எந்த பிரச்சினையும் எளிதாக தீர்ப்பீர்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று அதிக வேலைப்பளு மனதிற்கு சஞ்சலத்தைக் கொடுக்கும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராகவே இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம். இன்று குடும்ப கஷ்டம் கடன் தொல்லை போன்றவை நீங்கும். வாழ்க்கையில் இன்று முன்னேற்றமான சூழ்நிலையை சந்திக்கக்கூடும். பயத்தை வெளிக்காட்டாமல் தைரியமாக இருப்பது போல் மற்றவர் முன்பு செயல்படுவீர்கள்.

கூடுமானவரை இனம் தெரியாத பயத்தை தயவுசெய்து விலக்கிவிடுங்கள். மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள். இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். காரியத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும். கூர்மையான மதிநுட்பத்தால் எந்த பிரச்சினையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்ல முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமாக இருப்பார்கள். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள்.

மனம் ஓரளவு நிம்மதியாக காணப்படும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அதுபோலவே காக்கைக்கு தினசரி அன்னமிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்களுடைய கர்ம வினைகளை தீர்த்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |