துலாம் ராசி அன்பர்களே..!! இன்று மனமகிழ்ச்சியும் வேதனையும் சரி பங்காக நடக்கும் நாளாகவே இருக்கும். இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வீக நம்பிக்கையால் தேகத்தில் புதிய தெம்பும் உற்சாகமும் ஏற்படும். உல்லாச பயணங்கள் செல்ல நேரிடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டியில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது மட்டும் நல்லது. காரியத்தில் இருந்த தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். உங்களுடைய விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கக்கூடும்.
மன குழப்பம் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்தவர்களுடைய விவகாரங்களில் தயவுசெய்து தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகும் வாய்ப்பு உண்டாகும். கூடுமானவரை மற்றவர் பிரச்சினைகளில் இருந்து இன்று விடுபடுவது நல்லது. அதாவது பஞ்சாயத்துக்கள், யாரிடமும் எதுவும் பேசாமல் இருப்பது நல்லது. கூடுமானவரை உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை கொடுக்கும். இன்று குடும்பத்தில் ஓரளவு தான் கலகலப்பு காணப்படும்.
பிரச்சினைகளை சரி செய்வதற்கு முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் வாரம் வாரம் வெள்ளிக் கிழமையானால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை மட்டும் அன்னதானமாக கொடுங்கள் அது போதும். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்துமே நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்