துலாம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களை சிலர் புகழ்ந்து பேசக்கூடும். புகழ்ந்து பேசுபவரிடம் கொஞ்சம் விலகியே இருங்கள். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். குடும்பத்திற்கான பணச்செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமூகமாகவே நடந்து முடியும். தடைபட்ட காரியங்கள் சாதகமாகவே நடந்து முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும்.
இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். இருந்தாலும் வெளியில் செல்லும்பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு உகந்த நிறமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் முருகன் வழிபாடு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்