Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “திட்டமிட்ட இலக்கு நிறைவேறும்”.. விமர்சனம் செய்ய வேண்டாம்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! சிலர் இடையூறு செய்ய முயற்சிகளை மேற்கொள்வார்கள். செயல்களில் அதிக தற்காப்பு வேண்டும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். பணவரவை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதியை ஏற்படுத்தும். இன்று தேவையற்ற வீண் விவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம்.

தந்தையார் உடல்நிலை ஓரளவு முன்னேற்றகரமாக இருக்கும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் பொழுது கவனம் இருக்கட்டும். வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வியில் நிதானத்துடன் செயல்படவேண்டும். கல்வியில் இருந்த தடை இன்று விலகிச் செல்லும். இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள். அனைத்தும் சிறப்பாகவே  நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |