Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “தெளிவு பிறக்கும் நாள்”.. மன தடுமாற்றம் ஏற்படலாம்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாளாகவே இருக்கும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவார்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். இன்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல் படுங்கள் அது போதும்.

திடீர் மன தடுமாற்றம் ஏற்படலாம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள்  வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது ரொம்ப நல்லது. இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.

படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் அதிஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |