Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு…”வெளியூர் பயணத்தில் மாற்ம் செய்வீர்கள்”.. தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம்..!!

துலாம் ராசி அன்பர்களே…!!! இன்று பணிகள் நிறைவேற கூடுதல் உழைப்பு அவசியமாக இருக்கின்றது. தொழிலில் உருவாகிற இடையூறை நண்பர்களின் உதவியால் சரிசெய்வீர்கள். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் இன்று மாற்றங்களை செய்வீர்கள். இன்று எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் ஏற்படக்கூடும். மாணவர்கள் பாடங்களில் மிகவும் நிதானமாக படித்து, மனதில் பதிய வைத்துக் கொள்வது நல்லது. கூடுமானவரை எழுதிப் பார்ப்பது ரொம்ப நல்லது.

அடுத்தவரிடம் பழகும் பொழுது கவனமாக இருங்கள். இன்று உழைப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் பாராட்டுகள் குவியும். தேவையில்லாத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். கணவன்-மனைவிக்கிடையே இன்று சின்ன சின்னதாக பூசல்கள் இருக்கும். பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடியுங்கள். இன்று சகோதரிகளிடம் பேசும்பொழுது ரொம்ப கவனமாக பேசுங்கள். எந்தவித வாக்குவாதங்களும் வேண்டாம்.

வெளியூர் பயணம் செல்வதாக இருந்தால் பொருள்களை சரியாக எடுத்துக் கொண்டு செல்லுங்கள். அதாவது பொருட்களை சரியாக எடுத்துக் கொண்டோமா என்று கவனித்து செல்லுங்கள். இன்று கொஞ்சம் மறதி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

 

Categories

Tech |