Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு…”உபரி வருமானம் கிடைக்கும்”……அக்கம் பக்கத்தினர் இடம் அன்பு பாராட்டக் கூடும்…..!!!

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாகவே இருக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். நீங்கள் செய்ய நினைத்த வேலையை சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். இன்று புத்திரர்கள் கேட்ட பொருளை உடனே வாங்கி கொடுத்து மகிழ செய்வீர்கள். இன்று அக்கம் பக்கத்தினர் இடம் அன்பு பாராட்டக் கூடும்.

இன்று அனைத்து விஷயங்களுமே உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களுடைய வாக்கு வன்மையால் சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் சிறப்பாக நடக்கும். பதவி உயர்வு, வரவேண்டிய சம்பளம் அனைத்துமே வந்து சேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே முடியும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.

அதுபோலவே இன்று தேவையில்லாத பொருள்களை மட்டும் வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் மட்டும் நீங்கள் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |