துலாம் ராசி அன்பர்களே..!! இன்று ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். அனைத்து வேலைகளும் உடனடியாக முடியாமல் இழுபறியான நிலை கொஞ்சம் இருக்கும். கவலை வேண்டாம் அனைத்துமே சரியாகும். மதியத்திற்கு மேல் உங்களுக்கு மன அமைதி இன்று கூடும். செலவுகளுக்கு ஏற்ற வரவும் வந்து சேரும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாக கூடும். பாடங்களை கொஞ்சம் கவனமாக படியுங்கள். மதிப்பெண்கள் பெறுவதற்கு உதவும். துன்பங்கள் ஓரளவு விலகிச்செல்லும்.
மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். ஆன்மீக தளங்களுக்கு சென்று வருவதற்கான சூழலும் அமையும். தெய்வத்திற்காக சிறு தொகையை இன்று செலவிட நேரிடும். கணவன் மனைவியைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை. அனைத்து விஷயங்களுமே சரியாக நடக்கும். குடும்பத்தாருடன் இன்று வெளியிடம் சென்று பொழுதைக் கழிப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை இன்று நீங்கள் வாங்கி குவிப்பீர்கள். பிள்ளைகள் மீது ரொம்ப அன்பாக நடந்து கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ஓரளவு சிறப்பு இருக்கும்.
கூடுமானவரை கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டையும் சூரிய நமஸ்காரத்தையும் நீங்கள் செய்வதால் உங்கள் வாழ்க்கையில் இன்று நடக்கக்கூடிய விஷயங்களில் மிகப்பெரிய மாற்றம் நிகழும். தயவுசெய்து இதை செய்வதற்கு பழகிக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்