துலாம் ராசி அன்பர்களே..!! இன்று பிடிவாத குணத்தை தளர்த்தி கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். பொது வாழ்வில் எதிர்பார்த்தபடி பொறுப்புகளும் பதவிகளும் வந்து சேரும். தாய்வழி ஆதரவு உண்டாகும். வாகன மாற்றம் செய்வது பற்றி சிந்தனை மேற்கொள்வீர்கள். இன்று எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்துசேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு இன்று குறையலாம்.
வாகனம் வீடு மூலம் செலவுகளும் அவ்வப்போது கொஞ்சம் ஏற்படலாம். எதையும் செய்யும் முன் தயக்கம் கொஞ்சம் ஏற்படும். வீண் அலைச்சல் காரிய தாமதம் போன்றவை ஏற்படுவதால் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கூட கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பீர்கள். அதேபோல கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்