Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “குடும்பத்தில் பாசத்துடன் நடப்பார்கள்”… உடல்நலம் சிறப்பாக இருக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று உதவி கிடைக்க கொஞ்சம் தாமதமாகலாம். குடும்ப உறுப்பினர் பாசத்துடன் நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிகமாக பணிபுரிவீர்கள். பணவரவில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் விலைக்கு வாங்க வேண்டாம். இன்று மாணவக் கண்மணிகள் சிறிது சிரத்தை எடுத்தால் பெரிய வெற்றி பெறலாம்.

‘அனைத்திலும் நினைத்த மதிப்பெண் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பித்தம் மயக்கம் போன்ற உபாதைகளும் நீங்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் மிகுந்த கவனம் வேண்டும். கவனமாக வேலையை செய்யுங்கள். ரொம்ப சிறப்பாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்

Categories

Tech |