Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “நண்பரின் பேச்சு சங்கடத்தை ஏற்படுத்தும்”.. கவலை வேண்டாம்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரின் எதார்த்த பேச்சு சங்கடத்தை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் சராசரி உற்பத்தி விற்பனை இருக்கும். பண வரவுக்கு ஏற்ப செலவுகளை திட்டமிடுவீர்கள். வெளியூர்பயணத்திட்டத்தில் மாறுதல்களை செய்வீர்கள். இன்று திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரியத்தடைகள் நீங்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். இன்று மனம் கொஞ்சம் குழப்பம் அடையும் பார்த்துக்கொள்ளுங்கள். எதைப்பற்றியும் கவலை வேண்டாம். காரியத்தில் மட்டும் கண்ணும் கருத்துமாக செய்யுங்கள்.

முக்கியமான காரியமாக இருந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். ஓன்றும் பிரச்சினை இல்லை. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |