துலாம் ராசி அன்பர்களே..!! இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துக்களில் லாபம் கிடைத்து மகிழ்வீர்கள். அந்நிய தேசத்திலிருந்து வரும் தகவல் அனுகூலமாக இருக்கும். இடமாற்றம் இனிமையைக் கொடுக்கும். இன்று குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரக்கூடும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.
பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பெண்களுக்கு காரியத்தடையால் மனக்குழப்பம், டென்சன் போன்றவை ஏற்படலாம். கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்