மற்றவர்களுக்கு தோள் கொடுத்து உதவக் கூடிய துலாம் ராசி அன்பர்களே..!! இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். இடம், பூமி வாங்கி சேர்க்கும் எண்ணம் உருவாகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். இன்று எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் மட்டும் இருக்கும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும் போது கவனமாக பழகுங்கள். தொழில் வியாபாரம் நிதானமாக தான் நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சியில் சாதகமான பலனை கொடுக்கும். மறைமுகப் போட்டிகளால் நெருக்கடிகளை இன்று சந்திக்கக்கூடும். அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்.
உங்களை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட கூடும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். ஆசிரியரின் சொல்படி தயவுசெய்து நடந்து கொள்ளுங்கள். சக மாணவர்களிடம் எந்தவிதமான பிரச்சினைகளும் வேண்டாம். இன்று பொறுமையைக் கையாண்டாலே போதுமானதாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான காரியங்களை செய்யும்போது அல்லது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து விஷயமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்