Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… திறமை வெளிப்படும்…சந்தோஷம் அதிகரிக்கும்…!

துலாம் ராசி அன்பர்களே …!    இன்று பிறருக்கு உதவுவதை நீங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பீர்கள். நுட்பமான வேலையையும் மிக சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். ஆனால் கடுமையான உழைப்பு இருந்தாலும் உங்களுக்கு நல்ல பெயர் மட்டும் இருக்காது. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் உங்கள் வேலையை செய்விர்கள். பிள்ளைகளிடம் மட்டும் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள்.

அவர்கள் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதும் ரொம்ப நல்லது. பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மனநிம்மதியும், சந்தோஷமும் இன்று இருக்கும். இன்று அணிகலன்களை தயவு செய்து நீங்கள் கடனாக யாருக்கும் கொடுக்க வேண்டாம். மங்கள காரியங்களை பற்றி பேச்சுவார்த்தை நடக்கும். எந்த ஒரு தடையும் இல்லாமல் இன்று காரியங்கள் சிறப்பாக நடக்கும். கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றியும்  ஏற்படும்.உங்களுடைய திறமை வெளிப்படும்.

நீண்ட நாட்களாக போட்டிருந்த திட்டம் முழுவதுமாக செயல்பட வாய்ப்பு உண்டு. இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்  பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரோம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |