Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “பெண்களால் கட்டுக்கடங்காத செலவு” மனக்கவலை நீங்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று பெண்களால் கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். வாகன விபத்தை தடுக்க வண்டியில் மெதுவாகச் செல்லுங்கள். உறவுகளுடனான கருத்து வேறுபாட்டை  தவிர்க்க முயலுங்கள். இன்று குடும்பத்தில் ஓரளவு ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி இருக்கும். அன்பு பிறக்கும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களுமே  அனுகூலமாகவே நடக்கும். மனக்கவலை நீங்கி நிம்மதியாக இருப்பீர்கள். மேலதிகாரிகள் சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். தொழிலில் உங்களுக்கு உற்பத்தி விற்பனை அதிகமாகவே இருக்கும்.

இன்று உழைப்பு கூடும் நாளாக இருக்கும். பணவரவு  ஓரளவு வந்து பையை நிரப்பும் நாளாக இருக்கும். இன்றைய  நாள் செல்வ செழிப்புடன் காணப்படுவீர்கள். மற்றவருடன் பேசும் போது மட்டும் கொஞ்சம் கவனம் இருங்கள். உங்களுடைய பேச்சில் மட்டும் நிதானத்தை இன்று கடை பிடித்து விட்டால் அனைத்துமே சிறப்பாகவே இருக்கும். அது போல நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். இந்த நிறம் உங்களுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரத்தை மேற்கொண்டு இன்று நாளை தொடங்கினால்  அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |