Categories
உலக செய்திகள்

7 நாட்கள்…. 227 பேர் பலி…. 1000_க்கும் அதிகமானோர் காயம்….. தொடரும் லிபியா உள்நாட்டுப் போர்….!!

லிபியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 227 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிபியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அந்நாட்டின் கிழக்கு பகுதியில்  இயங்கி வரும் போட்டி அரசு உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகிறது. லிபியா நாட்டில்  அரசியல் நிலையற்ற தன்மையின் காரணமாக இந்த போர் நடந்து வருகிறது. லிபியாவில்  தேசிய ராணுவத்தின் தளபதியாக பதவி வகிக்கும் போட்டி அரசின்  கலிபா ஹஃப்டர், தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் நோக்கத்தில் விமானப்படை,  தரைப்படையின்  மூலம் தாக்குதலில் ஈடுபட்டு  வருகிறார்.

Image result for A tank belonging to Libyan fighters loyal to the Government of National Accord (GNA)

இதுவரையில்  லிபியா அரசுக்கும், போட்டி அரசான கலிபா ஹஃப்டருக்கும் இடையே நடந்த தாக்குதலில்  227 பேர் பலியாகியுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதளுக்கிடேயே  போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் அனைத்தும்  ஒத்துழைப்பு தர  வேண்டும் என ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |