இந்தியாவில் ரிசர்வ் வங்கி அண்மையில் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. அதோடு ரெப்போ வட்டி விகிதமும் 5.9 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக உயர்ந்தது. இதனால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீட்டு கடன், வாகன கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தை கணிசமான அளவுக்கு உயர்த்தியுள்ளது. இந்நிலையில் எல்ஐசி நிறுவனமும் தற்போது வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
அதன்படி வீட்டு கடன்களுக்கான வட்டி விகித உயர்வு டிசம்பர் 26-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் எல்ஐசி நிறுவனமானது கடந்த செப்டம்பர் மாதம் வீட்டு கடன்களுக்கான வட்டியை உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும் 0.35 சதவீதம் வரை வீட்டு கடன்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.