ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்த பாலிசிதாரர்களால் கோரப்படாத தொகையின் மொத்த மதிப்பு ரூபாய் 21,539.5 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. LIC-ல் கோரப்படாத தொகையில் பெரும்பான்மை பகுதியானது பல வருடங்களாக நிலுவையில் இருக்கிறது. பாலிசிதாரர்களால் கோரப்படாத தொகைகளை பெறுவதற்குரிய வசதியை LIC தன் இணையதளத்தில் வைத்திருக்கிறது. LIC பாலிசியை சரண்டர் செய்வது எப்படி என்று நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். முதிர்வுக்கு முன்பு சரண்டர் செய்யும் பாலிசியால், பாலிசித் தொகையின் மதிப்பு குறைந்துவிடும்.
குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தொடர்ந்து பிரீமியம் செலுத்திய பின்னரே பாலிசியை சரண்டர் செய்ய இயலும். 3 வருடங்களுக்கு முன்பு சரண்டர் செய்தால், எந்தத் தொகையும் திரும்ப செலுத்தப்பட மாட்டாது. அத்துடன் 3 வருடங்களுக்கு பிறகு சரண்டர் செய்யப்படும் பாலிசிகளுக்கு, தற்செயலான பலன்களுக்காக செலுத்தப்பட்ட பிரீமியத்தை தவிர்த்து, செலுத்தப்பட்ட பிரீமியம் தொகையில் 30% பணத்தை திரும்பப்பெறுவர். இதற்கிடையில் பாலிசியை தாமதமாக சரண்டர்செய்தால் அதிகமான பணம் கிடைக்கும்..