இந்தியாவில் எல்ஐசி நிறுவனம் புதிய பென்சன் பிளஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டம் பங்குச்சந்தையுடன் தொடர்பில்லாத திட்டம் என்பதால் பங்குச்சந்தையின் ஏற்றம், இறக்கம் திட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. அதன்பின் புதிய பென்ஷன் பிளஸ் திட்டத்தின் மூலம் பென்ஷன் பணத்தை சேமிப்பு ஓய்வு கால நிதியாக மாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் காலம் முடிவடைந்த பிறகு ஆண்டு தொகை வாங்கி மாதந்தோறும் நிலையான வருமானம் வரும் வகையில் திட்டத்தை மாற்றிக் கொள்ளலாம்.
இந்நிலையில் பென்ஷன் பிளஸ் திட்டத்தில் ஒரே காப்பீடு மற்றும் தொடர் காப்பீடு என இருவகையில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் தொடர் காப்பீடு திட்டத்தின் படி கட்ட வேண்டிய காப்பீட்டு தொகை மற்றும் முடிவடையும் காலம் போன்றவற்றை முதலில் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் காப்பீடு தொகையை செலுத்த வேண்டும். இதனையடுத்து ஒரே காப்பீடு திட்டத்தில் 4 வகையான நிதிகள் இருக்கிறது.
இதில் வாடிக்கையாளர் விருப்பப்பட்ட நிதியை தேர்வு செய்து முதலீடு செய்து கொள்வதோடு, ஒரு பாலிசி ஆண்டில் 4 முறை இலவசமாக நிதியை மாற்றியும் கொள்ளலாம். அதன்பின் நிதியில் உள்ள பணத்தை நான்கு ஆண்டுகளுக்கு பின் பாதியாக எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படும். இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ள விரும்புவர்கள் நேரடியாக எல்ஐசி அலுவலகத்திற்கு சென்றோ, இல்லையெனில் எல்ஐசி ஏஜெண்டுகள் மூலமாகவோ இணைந்து கொள்ளலாம். மேலும் எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான https://licindia.in என்ற ஆன்லைன் முகவரி மூலமாகவும் முதலீடு செய்து கொள்ளலாம்.