பிரெக்சிட் அறிவிப்புக்கு பின்பு பிரான்சில் வசிக்கும் பிரிட்டன் மக்களுக்கு ஓட்டுநர் உரிமம் குறித்து பல குழப்பங்கள் இருந்த நிலையில் அதற்கான தீர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
பாரிசில் இருக்கும் பிரிட்டன் தூதரகம் இதுகுறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பிரிட்டன் மக்கள், தங்கள் ஓட்டுநர் உரிமத்தை பிரான்சில் உபயோகிப்பது மற்றும் மாற்றுவது குறித்து பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் நடவடிக்கை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி பிரிட்டன் ஓட்டுநர் உரிமம் கடந்த 2020 ஆம் வருடம் ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்பு பெறப்பட்டதாக இருந்தால், அது காலாவதியாகும் வரை பிரான்சில் உபயோகப்படுத்தலாம். மேலும் பிரிட்டன் ஓட்டுநர் உரிமம் காலாவதி ஆகிவிட்டது அல்லது காலாவதியாகும் நேரம் நெருங்கி விட்டது எனில், பிரெஞ்சு ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.
அப்போது தற்காலிகமாக ஒரு ஆவணம் வழங்கப்படும். ஓட்டுநர் உரிமம் பெறும் வரை அந்த ஆவணத்தை உபயோகித்து பிரான்சில் வாகனத்தை ஓட்டிக் கொள்ளலாம். 2021 ஆம் வருடத்திற்கு பிறகு ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால் வாழிட உரிமம் அளிக்கப்பட்டதிலிருந்து ஒரு வருடம் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.