Categories
அரசியல்

Life Insurance: “புகைப்பிடிப்பவர்கள்” செய்ய வேண்டியது என்ன தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

புகைப் பிடிப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

நீங்கள் புகைப் பிடிக்கும் பழக்கத்தை மறைக்க கூடாது. இதையடுத்து நீங்கள் ஆயுள்காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கையில், சென்ற 12மாதங்களில் புகைஇலை பொருட்களைப் உபயோகித்தீர்களா எனும் கேள்வி காப்பீட்டாளர்கள் மூலம் கேட்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். அப்போது சில பேர் அதை மூடிமறைக்க முயற்சி செய்வார்கள். எனினும் இன்சூரன்ஸ் நிறுவனமானது மருத்துவ அல்லது நிகோடின் சோதனைகள் வாயிலாக கண்டுபிடித்துவிடுகிறார்கள். இது உங்கள் ரத்தம் (அல்லது) சிறுநீர் மாதிரிகளில் நிகோடினைக் கண்டறியும். அவ்வாறு இன்சூரன்ஸ் நிறுவனமானது உண்மையை கண்டறிந்தால் உங்களது பாலிசியானது கேன்சல் செய்யப்படலாம்.

இதில் ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் என்பது நல்ல நம்பிக்கையுடன் செயல்படுத்தப்படும் ஒன்று. அதுமட்டுமல்லாமல் நீங்கள் ஆயுள்காப்பீட்டு பாலிசியினை வாங்கும் சமயத்தில் நல்ல நம்பிக்கைஉடன் இருந்தால் மட்டும் கிளைம்களை கேட்டுப்பெற இயலும். இதற்கிடையில் காப்பீட்டாளர்கள் பாலிசி வழங்குதல் (அல்லது) உரிமை கோரல்களின் ஒப்புதலுக்கு முன்பு கடும் உண்மைச் சோதனைகளை மேற்கொள்கின்றனர்.

ஆகவே முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்தாதது உரிய செயல் முறையைத் தடுக்கலாம். இது பற்றி டாடா ஏஐஏலைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சமித் உபாத்யாய் கூறியதாவது, “பாலிசி விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதால் நுகர்வோர் தேவைகளைப் புரிந்து கொள்வதற்காக ஆயுள் காப்பீட்டாளர்கள் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரோக்கியம் குறித்த விவரங்களை கேட்கின்றனர்.

ஆகையால் உண்மைகளின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக பாலிசி விண்ணப்பத்தின்போது உங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இது கூடுதல் பிரீமியம் செலுத்துவதற்கு வழி வகுக்கும் என்றாலும், புகைப் பிடிக்கும் பழக்கத்தால் மரணம் நிகழும் பட்சத்தில் பாலிசிதாரர் குடும்பத்தினரின் டெத் கிளைம் நிராகரிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |