செல்லமாக வளர்த்த இரண்டு சிங்கங்களையும் நடைபயிற்சிக்கு அழைத்து சென்றபோது எதிர்பாராதவிதமாக தாக்கியதில் மேத்யூசன் உயிரிழந்தார்.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேஸ்ட் மேத்யூசன் என்பவர் இரண்டு வெள்ளை சிங்கங்களை குட்டிலிருந்து வளர்த்து வந்துள்ளார். 2 சிங்கங்களையும் புதன்கிழமையன்று சஃபாரி லாட்ஜில் நடை பயிற்சிக்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது திடீரென இரண்டு சிங்கங்களும் அவரை தாக்கியது. இதை பார்த்த அவரது மனைவி ஓடி சென்று அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் அவரின் முயற்சிகள் வீணானது.
இரண்டு சிங்கங்களையும் மேத்யூசன் வேட்டையாடுவதற்கு பதிவு செய்யப்பட்ட பகுதியிலிருந்து காப்பாற்றிக் கொண்டு வந்து வளர்த்துள்ளார். 2017 ஆம் ஆண்டு இந்த இரண்டு சிங்கங்களும் அருகிலிருந்த ஒரு நபரை கொன்றதாக ஆப்பிரிக்க ஜியோகிராபிக் தெரிவித்துள்ளது. இரு சிங்கங்களும் வளர்த்தவரையே ஏன் தாக்கியது என்ற காரணம் தெரியவில்லை என்றும்,மேத்யூசன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இயற்கை மற்றும் வனவிலங்குகளுடனே செலவளித்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.