உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஏதாவது ஒரு விஷயம் வியக்க வைப்பதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது மீனின் வயிற்றில் குட்டி நீர் ஆமை ஒன்று இருந்துள்ள சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. FCW ரிசர்ச் இன்ஸ்டிடியூட் தன்னுடைய அதிகார பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளது. அதில் largemouth bass என்ற மாமிச மீன் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது மீனின் வயிற்றுப்பகுதியில் ஏதோ ஒன்று விசித்திரமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து மீனின் வயிற்றை திறந்து பார்த்த போது வயிற்றுப் பகுதியில் சிறிய ஆமை ஒன்று உயிருடன் இருந்ததுள்ளது. இதை பார்த்த அவர்கள் மிகவும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். தற்போது அந்த ஆமையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.