ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
கடந்த 2001ஆம் ஆண்டு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலன் இந்த கொலை வழக்கு. இந்த கொலை வழக்கு அந்த காலகட்டத்தில் மிகப் பெரிய பரபரப்பை உடன் பேசப்பட்டது . சரவண பவன் ஹோட்டலில் பணிபுரிந்த ஜீவஜோதி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட தவறான உறவின் காரணமாக அவரின் கணவர் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்த வழக்கில் கடந்த 2009-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு எதிராக ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராஜகோபால் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனு கிட்டத்தட்ட ஒரு மூன்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விதித்த ஆயுள் தண்டனையை உத்தரவை உறுதி செய்வதாக தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ராஜகோபாலுக்கு எதிரான அத்தனை சாட்சியங்களும் மிக வலுவாக இருந்ததன் காரணமாகவும் , அரசு தரப்பும் இவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை ஒரு காலமும் குறைக்கக் கூடாது என்று தொடர்ந்து வாதிட்டு வந்த நிலையில் தற்போது இந்த ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது.அது மட்டுமில்லாமல் வரும் ஜூலை 7ம் தேதிக்குள் அவர் உடனடியாக சரணடைய வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.