தேங்காய்ப்பால் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – அரை கிலோ
எண்ணெய் – 100 கிராம்
கிராம்பு – 2
சோம்பு – 2
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
மல்லி தழை – தேவைக்கேற்ப
தேங்காய் – ஒரு மூடி
பட்டை – சிறு துண்டு
செய்முறை:
முதலில் பச்சரிசியை நன்கு கருவி வடிகட்டி வைத்து கொள்ளவும். பின்பு தேங்காயை அரைத்து பால் எடுத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு, சோமு, அறிந்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, அரிசியையும் போட்டி கிளறவும்.
அதனை தொடர்ந்து தேங்காய் பாலையும், தண்ணீரும் ( ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர்) சேர்க்க வேண்டும். இறுதியில் உப்பு மற்றும் மல்லித்தழை சேர்த்து கிளறி, நன்றாக வெந்ததும் இறக்கினால் சுவையான தயிர் சாதம் தயார்.