ஆவாரம் பூ சூப் செய்ய தேவையான பொருட்கள்:
ஆவாரம்பூ – ஒரு கைப்பிடி
மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – ஐந்து பல்
சின்ன வெங்காயம் – 6
சீரகம் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
தக்காளி – ஒன்று
நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
ஆவாரம் பூக்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டை நசுக்கிப் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், தக்காளி மஞ்சள்தூள், உப்பு இவற்றுடன் ஆவாரம் பூவை போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை கொதிக்க விடவும்.
பிறகு வடிகட்டி குடிக்கவும். அதிலுள்ள ஆவாரம்பூவை மென்று விழுங்கினால் பற்களின் இடையில் உள்ள கிருமிகள் மாயமாக மறைந்துவிடும். பல் வலுப்பெற்று ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.