அசாத் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 100
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
தேங்காய் – ஒரு மூடி
எலுமிச்சம்பழம் – ஒரு மூடி
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு போட்டு வெடிக்க விடவும்.
அதனுடன் பெருஞ்சிரகம், அரைத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சிப்பூண்டு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு தக்காளி, கருவேப்பிலை, மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
பிறகு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, வெங்காயம் வெந்து வரும்போது, வெங்காயத்தை நன்றாக கடைந்து விடவும். அதில் தேங்காயை பட்டுப்போல அரைத்து ஊற்றி, எலுமிச்சம்பழம் பிழிந்து, இறுதியில் மல்லித்தழை தூவி இறக்கவும்.
குறிப்பு:
இந்தக் குழம்பில் உருளைக்கிழங்கு, பட்டாணி, கேரட் ஆகியவற்றை அவித்து தோல் உரித்து போடலாம், பின்பு மசால் வடை, பருப்பு உருண்டை, அவித்த முட்டையையும் போடலாம்.