மார்ப்பு பகுதியில் உள்ள சுருக்கங்களை நீக்கி மிருதுவான தோலை பெறுவதற்கு என்ன செய்வது என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
நம் அழகை பாதுகாப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்ல. நம்மை சுற்றி இருக்கும் மாசுபாடுகள், உணவு முறை, பழக்க வழங்கங்கள் காரணமாக பாதிப்பு ஏற்படலாம். முகத்தின் அழகை மேம்படுத்த பல காரணிகள் இருக்கின்றன. ஆனால், உடலின் அழகை மேம்படுத்த மிக குறைந்த காரணிகளே உள்ளன. அதிலும் மார்பு பகுதியை அழகுடன் வைத்து கொள்ள என்னென்னவோ செய்வோம். அனால் மார்பகத்தில் ஏற்பட கூடிய சுருக்கங்களை நீக்க பெரிய அளவில் எதையும் செய்ய வேண்டிய வேண்டாம். அதனை சரி செய்ய சில குறிப்புகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தூங்கும் முறை:
மார்பு பகுதியில் சுருக்கம் இல்லாமல் மிருதுவாக இருக்க, பெண்கள் மேல் நோக்கியபடி படுத்து உறங்க வேண்டும். மாறாக பின்புறமாக கவுந்து படுத்து உறங்கினால், மார்பு பகுதியில் சுருக்கங்கள் ஏற்பட்டு மார்பகங்கள் விரைவில் தொங்கி விடும்.
கற்றாழை:
கற்றாழை ஜெல்லை மார்பகங்களில் தேய்த்து வருவதால், மார்பக வறட்சியை நீக்கி, மிருதுவான சருமத்தை பெறலாம். மேலும், மார்பக சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
குளியல் முறை:
குளிக்கும் போது, மார்பு பகுதியில் நேரடியாக வெந்நீரை ஊற்ற கூடாது. அதிகபடியான வெப்பம் நேரடியாக மார்பு பகுதிக்கு செல்வதால் சுருக்கங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. ஆதலால் இனி குளியல் முறையை மாற்றி கொள்வது நல்லது.
உள்ளாடை:
உள்ளாடையை சரியாக அணியவில்லை என்றால், மார்பகத்தில் சுருக்கங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. உங்களின் மார்பக அளவிற்கு ஏற்றவாறு உள்ளாடைகளை அணிவது மிக நல்லது.
உடற்பயிற்சி:
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது, மார்பக பகுதியில் உள்ள தசைகள் சுருங்க, அதிக அளவில் வாய்ப்புள்ளது. அதனால் புஷ்-அப்ஸ் எடுக்கும் போது குறைந்த அளவிலே எடுக்க வேண்டும். மார்பக பகுதியில், கைகளை வைத்து மசாஜ் செய்வது நல்லது. அப்படி செய்வதினால், மார்ப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கு வழி வகிக்கும்.
சன்ஸ்க்ரீன் லோஷன்:
நாம் வெளியில் செல்லும் போது சன்ஸ்க்ரீன் லோஷன் போட்டு செல்வது மிக நல்லது. அதனால் சூரிய ஒளியினால் உண்டாகும் பாதிப்புகளில் இருந்து தடுக்கும். மார்பக பகுதியில் ஏற்படும் சுருக்கங்களை போக்குவதற்கு இது சிறந்த முறையாகும்.