பெண்கள், ஆண்கள் இருவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை முடி உதிர்வு. அதனை சரி செய்ய என்ன வழி? என்பதனை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தலைமுடி உதிர்வது இன்று பலரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும், பலன் கிடைக்காமல் வேதனை அடைகிறோம். தலைமுடி உதிர்வதை நிறுத்துவதற்கு பல்வேறு எண்ணெய்கள் வாங்கி மாதக்கணக்கில் பயன்படுத்தினாலும், தீர்வு மட்டும் கிடைப்பதில்லை.ஒருவருக்கு தலைமுடி உதிர்வதற்கு முக்கியமான மற்றும் முதன்மையான காரணமாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடு தான்.
அது கிடைக்காத பட்சத்தில் தான் அதிகளவிலான தலைமுடி கொட்ட ஆரம்பிக்கிறது. தலைமுடி உதிர்வதைத் தடுக்க பல்வேறு ஹேர் பேக்குகளும் உள்ளன. இப்படி எதைப் பயன்படுத்தியும் உங்கள் தலைமுடி உதிர்வது குறையவில்லையா? அப்படியானால் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். தலைமுடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும் ஒரு சிறப்பான வழி தான் கறிவேப்பிலை ஜூஸ். என்ன கறிவேப்பிலை ஜூஸா? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆம், கறிவேப்பிலையைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்தால், நற்பலனை வேகமாக பெறலாம்.
கறிவேப்பிலை ஜூஸ்:
தேவையான பொருட்கள்:
கறிவேப்பில்லையை – 2 கையளவு
சீரகம் – 1/2 டீஸ்பூன்
தயிர் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 3 சிட்டிகை
பெருங்காயத் தூள் – 3 சிட்டிகை
செய்முறை:
முதலில் மிக்சியில் கறிவேப்பிலை, சீரகம், தயிர், உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் எடுத்து கொள்ளவும்.
பின் அதனுடன் தேவையான அளவு நீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து கொண்டால், கறிவேப்பிலை ஜூஸ் தயார்.
இந்த மாதிரி ஜூஸ் தயாரித்துக் தினசரி குடித்து வந்தால் கசப்புத்தன்மை எதுவும் தெரியாது. முடி உதிர்வு எளிதில் குறைந்து,முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.