Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பீட்ரூட் ஹல்வா…மிக சுவையாக… செய்வது எப்படி?

பீட்ரூட் ஹல்வா செய்ய தேவையான பொருட்கள்:

பீட்ரூட்                                               – அரை  கிலோ
முந்திரிப்பருப்பு                             – 50 கிராம்
நெய்                                                     – 200 கிராம்
பசும்பால்                                            – அரை  லிட்டர்
சர்க்கரை                                             – 200 கிராம்
கிஸ்மாஸ் பழம்                              – 50 கிராம்

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் பீட்ரூட்டை நன்கு  துருவி எடுத்து கொள்ளவும். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் நெய் ஊற்றி அதனுடன் முந்திரிப்பருப்பு, கிஸ்மஸ் பழம், துருவி வைத்திருக்கும் பீட்ருட், பால் சேர்த்து  ஒன்றாக நன்கு வேகவிடவும்.

பின்னர் வேகவைத்த பீட்ரூட்டானது 15 நிமிடம் நன்றாக வெந்து, பால் வற்றி வரும் பொழுது சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விடவும். அதில் இனிப்பு ஒன்று சேரும் வரை மிதமான சூட்டில் வேகவிடவும்.

பிறகு அதில்  கிஸ்மஸ் பழம்மற்றும் முந்திரிப்பருப்பை தூவி இறக்கினால் சுவையான பீட்ருட் ஹல்வா ரெடி.

Categories

Tech |