Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

காய்ச்சல், தொண்டைப்புண் குணமாக…தீர்வு இதோ…!!

சுக்கின் மருத்துவ குணங்கள் பற்றிய செய்தி தொகுப்பு: 

“சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை” என்பது வழக்கத்தில் சொல்லப்படும் பழமொழி ஆகும்.

சுக்கு திரிகடுகத்தில் முதன்மையானது. சுக்கு, மிளகு, அதிமதுரம் ஆகியவற்றை நீரிலிட்டு ஊற வைத்து சிறிது நேரம் கழித்து வடிகட்டி குடித்துவர இருமல், சளி, தொண்டைக்கட்டு குணமாகும்.

சுக்கு, திப்பிலி, அதிமதுரம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து பாத்திரத்தில் இட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர காய்ச்சல் குணமாகும்.

ஒரு துண்டு சுக்கை நீர் விட்டு பாதியாக காய்ச்சி பால், சீனி சேர்த்து இருவேளை சாப்பிட்டு வர வாய்வு அகலும்.

சுக்கை உண்டு வருவதால் பசி உண்டாகும். தலை சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். குடல்புண், வயிற்று வலி, பல் வலி, ஆஸ்துமா ஆகியவை குணமாகும்.

சுக்கு ,வெள்ளைப்பூடு, குறுமிளகு இம்மூன்றையும் சம அளவு எடுத்து பொடியாக்கி அதை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூளைக்குரு நீங்கி விடும்.

 

Categories

Tech |