Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அடை தோசை ரெசிபி…அதுவும் சிக்கன் வச்சு…செஞ்சி பாருங்க…!!

சிக்கன் அடை செய்ய தேவையான பொருட்கள்:

காக் அடை மாவு                 – 100 கிராம்
மிளகுத்தூள்                          – அரை டீஸ்பூன்
இஞ்சி, பச்சை மிளகாய் – சிறிதளவு
கோழிக்கறி                          – 250 கிராம்
மஞ்சள்தூள்                           – அரை ஸ்பூன்
பூண்டு, வெங்காயம்        – சிறிதளவு

செய்முறை:

கோழிக்கறி சுத்தம் செய்து, எலும்பு இல்லாமல் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், மிளகுத்தூள் அரை டீஸ்பூன், சிறிது தயிர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

அதனுடன் தேவையான அளவு தண்ணீர், வெங்காயம், இஞ்சிப்பூண்டு, பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு ஊற வைக்க வேண்டும். அதனை தொடர்ந்து ஊற வைத்த கோழியையும் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊத்தாப்பம் போல்  ஊற்றி சுட்டெடுக்கவும். இப்போது சுவையான கோழி அடை தயார்.

Categories

Tech |