Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஸ்பைஸியானா…மாலை நேர… ஸ்னாக்ஸ் ரெசிபி…!!

ஸ்பைஸி சிக்கன் போண்டா செய்ய தேவையான பொருட்கள் :

சிக்கன் கைமா                                                 – கால் கிலோ,
சின்ன வெங்காயம்                                       – 50 கிராம்,
போண்டா மாவு                                               – 250 கிராம்,
சிக்கன் மசாலா                                                – 3 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள்                                                        – டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய்                                              – 2,
பூண்டு                                                                    – 5 பல்,
கருவேப்பிலை                                                  – 2 ஆர்க்கு,
சோம்பு                                                                   – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு                                                                      – ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல்                                        – ஒரு கைப்பிடி அளவு,
பொட்டுக்கடலை                                               – 50 கிராம்,
இஞ்சி                                                                       – 2 சிறிய துண்டு,
கொத்தமல்லித் தழை                                       – சிறிதளவு.
உப்பு, எண்ணெய்                                                 – தேவையான அளவு.

செய்முறை :

எலும்பில்லா சிக்கனை  சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாயை நறுக்கியும், தேங்காயை துருவியும் கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில்  சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கருவேப்பிலை, தேங்காய்த் துருவல், சிக்கன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய கொத்தமல்லித் தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும். வதக்கிய சிக்கன் நன்றாக வெந்ததும், அதனை ஆறவைத்து  உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

பாத்திரத்தில் போண்டா மாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் வரும்வரை கரைத்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் உருண்டைகளை, கரைத்து வைத்த மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்பைஸி சிக்கன் போண்டா ரெடி. அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Categories

Tech |