Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான… சிக்கன் நூடுல்ஸ் ரெசிபி…!!

சிக்கன் நூடுல்ஸ் செய்ய தேவையான பொருள்கள்: 

சிக்கன்                                          – 100 கிராம்
நூடுல்ஸ்                                       – 1 பாக்கெட்
வெங்காயம்                                – 100 கிராம்
பச்சை மிளகாய்                       – 2
மிளகுத்தூள்                                – அரை தேக்கரண்டி
சர்க்கரை                                      – 1/4 தேக்கரண்டி
சோயா சாஸ்                              – 1 தேக்கரண்டி
தக்காளி சாஸ்                           – 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்                     – போதுமான அளவு

செய்முறை :

சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறிய சைஸாக வெட்டி கொள்ளவும். பின்பு வெங்காயம், மிளகாய் இரண்டையும் நறுக்கி கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் துண்டுகளாக வெட்டி வைத்த சிக்கனை சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு  வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில்  கடாயை வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நூடுல்சை சேர்த்து வேக விட்டு தனியாக எடுத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு வேக வைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸை சேர்க்கவும்.

அதனை தொடர்ந்து சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் போதுமான அளவு உப்பு, 1/4 தேக்கரண்டி சர்க்கரையை  சேர்த்து கிளறி இறக்கி வைத்து பரிமாறினால் சுவையான சிக்கன் நூடுல்ஸ் ரெடி.

Categories

Tech |