கோழி சூப் செய்ய தேவையான பொருட்கள்:
கோழி – 1 கிலோ
இஞ்சி – 1 அங்குலம்
பெரிய வெங்காயம் – 2
மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
கடுகு – சிறிதளவு
கருவேப்பிலை – 1 கைப் பிடி
செய்முறை:
1 கிலோ கோழியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். ஒரு அங்குலம் இஞ்சி, 2 பெரிய வெங்காயம் ஆகியவற்றை சிறியதாக நறுக்கிக் வைக்கவும்.
பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து அதில் கடுகு, கருவேப்பிலையை சேர்த்து தாளித்து,அதனுடன் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், நறுக்கி வைத்த கோழித் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், மிளகுத்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மிதமான வேக விடவும்.
குக்கரில் விசில் வந்ததும் அடுப்பை அணைத்து, 10 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான கோழி சூப் ரெடி.