தொலைக்காட்சி பார்பதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகளிலிருந்து பாதுகாக்க பெற்றோருக்கான வழிமுறைகள்:
மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்ந்து டி.வி-யில் பார்க்கும் விஷயங்களுக்குப் பழக்கப்பட ஆரம்பிப்பார்கள். டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிடும் பழக்கத்துக்கு சில குழந்தைகள் ஆளாவார்கள். இதனால், உடல் எடை அதிகரிக்கலாம். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது போன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்க்கும் குழந்தைகள் அதை நடைமுறையிலும் பின்பற்ற ஆரம்பிப்பார்கள். எதற்கெடுத்தாலும் பயப்படும் குழந்தைகளுக்கு பயம் இன்னும் அதிகரிக்கும். பள்ளி செல்ல மறுப்பது, தனியாக ஓர் அறைக்குள் செல்ல மறுப்பது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். எனவே, மூன்று வயதுக்கு முன்னரரே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வதைப் பெற்றோர்கள் தவிர்க்கவேண்டும்.
குழந்தைகளை படிக்கும் நேரத்தில், தனியறையில் படிக்க வைத்து விட்டு அந்நேரத்தில் பெற்றோர்கள் தொலைக்காட்சியை பார்க்க செல்லுகின்றனர். அதனால், குழந்தைகளின் கவனம் முழுவதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கவே விரும்புகின்றன. எனவே குழந்தைகளுக்கு படிப்பின் மீது உள்ள நாட்டமே குறைந்து விடும் .
அதனால் சிறு வயதிலிருந்தே தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகள், அதில் உள்ள உணர்வுகளை அப்படியே உள்வாங்கி கொண்டு பொறாமை, கோபம், சந்தேகம், பழிவாங்கும் உணர்வு, சண்டை போடுதல், தவறான செயல்களை செய்தல், அடம் பிடித்தல், தவறான வார்த்தைகளை பேசுதல், போன்ற சிந்தனைகளுடன் வளர்வதால், இந்த குணங்களை அப்படியே வெளிப்படுத்துகின்றன
இப்போது உள்ள குழந்தைகள் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதால் அதில் பார்க்கப்படும் படங்களில் வயதுக்கும் மிஞ்சிய படங்கள், தவறான நிகழ்ச்சிகளைப் பார்த்து குழந்தைகள் வளர்வதால், இளம் வயதிலேயே பாலுணர்வு சார்ந்த பிரச்னைகள் அதிக அளவில் ஏற்பட்டு, அவர்கள் தவறான பாதையை நோக்கி செல்ல வாய்ப்பிருக்கிறது. மேலும், அதிகமான விளம்பரங்களைப் பார்க்கும் குழந்தைகள், அவற்றில் காண்பிக்கப்படும் பொருள்களின் மேல் அதிகம் ஆசைப்பட்டு அதை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி விடுவதால் அது நாளடைவில் அடம்பிடித்தால், பிடிவாதம் போன்ற குணங்களை கொண்டவர்களாக மாற ஆரம்பிக்கின்றனர்.
பெற்றோர்கள் தனது மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை தொலைக்காட்சியை பார்ப்பதற்கு அனுமதிக்க கூடாது. இதனால் எளிதில் கண் பார்வையானது மங்கிவிடும்.
குழந்தைகளின் அறிவை மெருகேற்றுவதற்காக மூன்று வயதுக்குப் மேல் உள்ளவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் நல்ல நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்பதற்கு அனுமதி செய்யலாம்.
தொலைக்காட்சியை பார்க்க, பெற்றோரின் உதவியுடன் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் எந்த ஒரு குழந்தைகளையும் அனுமதிக்க கூடாது.
ஆரோக்கியமற்ற பொருள்களைக் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் இந்த பொருள்கள் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும், இதில் பல்வேறு கலப்படம் செய்துள்ளதால் உடம்பிற்கு கேடு விளைவிக்கும் என்பதைப் தெளிவாக பேசிப் புரிய வைக்க வேண்டும்.
குழந்தைகள் வளர்ந்து பருவ வயதை அடையும் போது, அவர்கள் பார்க்ககின்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் பெற்றோர்கள் கவனதில் கொள்ள வேண்டியது அவசியம்.
குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தால், அதை தவிர்த்து விட்டு புத்தகம் வாசிப்பு, தோட்டக்கலை, விளையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுத்துவதால் அவர்களின் கவனத்தை அதிக அளவில் திசைமாற்ற முடிய வைத்திடுவதால் பெற்றோர்கள் எளிதில் அவர்களை புரிந்து கொள்ள முடியும்
டி.வி பார்ப்பதற்கென குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, மற்ற நேரங்களில் அவர்களை வேறு செயல்பாடுகளில் கவனம் செலுத்தவைப்பது நல்லது.
பெரியவர்கள், பெற்றோர்கள் கூடுமானவரை டி.வி பார்க்கும் நேரத்தைக் குறைத்துவிட்டாலே குழந்தைகள் தொலைக்காட்சியை பார்ப்பதை தவிர்த்து விட முடியும்.
வீட்டில் உள்ளவர்கள் டி.வி பார்க்கும் போது பத்து அடி தூரத்தில் அமர்ந்து இருந்து தான் பார்க்க வேண்டும். அப்படி செய்யா விட்டால், கண்களில் உள்ள தூரத்துப் பார்வை பிரச்னை ஆகிவிடும்.
சிறுவர், சிறுமியாக உள்ளவர்கள் 18 வயதுக்கு முன்னர் லேசர் சிகிச்சை செய்ய அனுமதிக்க வேண்டாம்.