Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பச்சரிசியை வச்சி… இந்த சாதம் செய்யலாம்… மிகுந்த சுவையுடன்…!!

தயிர் சாதம் செய்ய தேவையான பொருள்கள்:

பச்சரிசி                       – அரை கிலோ
பால்                               – 100 மில்லி
கெட்டியான தயிர்  – 200 மில்லி
பச்சை மிளகாய்     – 4
மாங்காய்                   – ஒன்று

செய்முறை: 

முதலில் பச்சை அரிசி சாதத்தை நல்ல பதமாக வடித்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் பச்சரிசி சாதம், கெட்டித்தயிர், சிறிதளவு பால் ஆகியவற்றை விட வேண்டும். அத்துடன் ஒரு மேஜிக் கரண்டி உப்பையும் சேர்த்து கொள்ளவும்.

பின்பு மிளகாய், சிறிய மாங்காய் ஆகியவற்றை பொடி பொடியாய் நறுக்கி போட்டு, அதனுடன் கருவேப்பிலையும், கொத்தமல்லி இலையையும் போட வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து, ஒரு கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி உளுந்தம் பருப்பு, கடுகு, வெங்காயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு சிவக்க வறுக்கவும். உடனே அதை சாதத்தில் கோட்டி நன்றாக கிளறினால் தயிர் சாதம் ரெடி.

Categories

Tech |